நுவரெலியா மற்றும் ராகலை வரை புதிய ரயில் பாதை

Date:

நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.

” நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் சேவை தேவையாக உள்ளது. எனவே, மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா – கந்தபளை ரயில் நிலையத்துக்கிடையில் ரயில் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய ரயில் பாதையும் நிர்மாணிக்கப்படும்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு வரை மரக்கறிகளை கொண்டு வருவதற்கு நானுஓயா ரயில் நிலையத்தை மையப்படுத்தி பொருளாதார மத்திய நிலைய பிரிவொன்று அமைக்கப்படும். ” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நானுஓயா ரயில் நிலையத்துக்கு வருகை தந்திருந்த அமைச்சர், நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்ல வரை செல்வதற்கு காத்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நட்பு ரீதியில் கலந்துரையாடினார். ரயில் நிலைய அதிகாரிகளையும் சந்தித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....