சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேபிடல்ஸ்

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற டெல்லி கேபிடல்ஸ் அணி 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க வீரர்களாக வார்னரும், பிலிப் சால்ட்டும் களத்தில் இறங்கினர். சால்ட் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஸ்வர் வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து இணைந்த வார்னர் – மிட்செல் மார்ஷ் இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

மார்ஷ் 25 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வார்னர் 21 ரன்னில் வெளியேறினார். சர்ப்ராஸ் கான் 10 ரன்களும் அமன் ஹகிம் 4 ரன்களும் எடுத்தனர். 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 62 ரன்கள் எடுத்திருந்தபோது மனிஷ் பாண்டே – அக்சர் படேல் இணைந்து பொறுப்புடன் விளையாடினர்.

இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தலா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்தது.

ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 ஆவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஆவது இடத்திலும் உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....