கொல்கத்தா அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. தோல்வி

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் – ஜெகதீசன் களத்தில் இறங்கினர். ஜெகதீசன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் போன்று நிதானமாக விளையாட, ஜேசன் ராய் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து தூள் பறத்தினார்.

29 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெகதீசன் 29 பந்தில் 27 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 31 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக ரன்களை சேர்த்த கேப்டன் நிதிஷ் ராணா 21 பந்தில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்தார்.

ரஸல் 1 ரன்னும், ரின்கு சிங் 18 ரன்னும், டேவிட் வைஸ் 12 ரன்னும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 200 ரன்களை குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

டூப்ளசிஸ் 17 ரன்னில் 2 சிக்சர்கள் அடித்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 2 ரன்னும், மேக்ஸ்வெல் 5 ரன்னும் எடுத்தனர். கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடி விமர்சனத்திற்கு ஆளான மஹிபால் லோம்ரோர் இந்த போட்டியில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார்.

விக்கெட்டுகள் ஒரு முனையில் விழுந்தாலும் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 22 ரன்களும் விஜயகுமார் வைஷாக் 13 ரன்களும் எடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....