முதல் முறையாக உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்க அனுமதி

Date:

கத்தோலிக்க திருச்சபை சீர்திருத்தம் தொடர்பாக உலக ஆயர்கள் மாமன்றம் அவ்வப்போது கூடி விவாதிக்கிறது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் ஆயர்கள் மாமன்ற கூட்டம் வாடிகனில் நடக்கிறது.
இதில் பல்வேறு கருத்துகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இதன் இறுதியில் குறிப்பிட்ட பரிந்துரைகள் மீது வாக்கெடுப்பு நடத்தி, அது போப் பிரான்சிஸ் ஒப்படைக்கப்படும். அதன்படி அறிக்கையை அவர் வெளியிடுவார்.

இந்த ஆயர்கள் மாமன்றத்தில் ஆயர் அல்லாத 70 உறுப்பினர்களை நியமிக்க போப் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார். இதில் சரிபாதி பேர் பெண்களாகவும் இருப்பார்கள். இந்த மாமன்றத்தில் இதுவரை ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த நிலையில், முதல் முறையாக இந்த மாமன்றத்தில் பெண்களுக்கு வாக்களிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கி உள்ளார்.

அதன்படி இந்த மாமன்றத்தில் ஆயர் அல்லாத பெண் உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். அத்துடன் 5 கன்னியாஸ்திரிகள் தேர்தல் பிரதிநிதிகளாகவும் நியமிக்கப்படுவார்கள்.

போப் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ள இந்த திருத்தத்தை வாடிகன் நேற்று வெளியிட்டது. கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் பொதுநிலையினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....