காபூல் விமான நிலைய தாக்குதல்

Date:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியேறியதும், அந்த நாடு தலீபான்கள் வசமானது. அதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வெடித்தன.

இதில் அப்பாவி பொதுமக்கள் 170 பேர் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை தலீபான் படையினர் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தலைவரின் பெயர், அவர் எங்கு, எப்போது கொல்லப்பட்டார் என்பன போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....