டிரம்ப்பை திணற அடிக்கும் ‘பாலியல்’ புயல்…!

Date:

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். ஆனால், அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இ.ஜீன் கரோல் இந்த விவகாரம் குறித்து, டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது1990-களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனிலுள்ள பெர்க்டார்ப் குட்மேன் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பைச் சந்தித்தேன்.
அப்போது பெண்களுக்கான உள்ளாடைகளைப் பரிசாக வாங்குவது குறித்து டிரம்ப் விளையாட்டுத்தனமாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார்.

அதையடுத்து, டிரஸ்சிங் அறையில் என்னைத் தள்ளிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தார்.
2019-ல் நியூயார்க் இதழால் வெளியிடப்பட்ட எனது புத்தகத்தின் ஒரு பகுதியிலேயே இந்தக் குற்றச்சாட்டை கூறி உள்ளேன்.

அவரைப் பார்த்து பயந்துதான், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இது குறித்து வெளியே தெரிவிக்காமல் இருந்தேன்.
ஆனால் இதை வெளியே கூறாமல் இருப்பதை நினைத்து வெட்கப்பட்டேன்.

அதற்காகதான் தற்போது உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறேன். அவர் என்னைப் பற்றி அவதூறு பரப்பினார். அதனால் எனக்கென ஒரு காதல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது” என கூறினார்.

ஆனால், டிரம்ப் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோ டகோபினா, டிரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இ.ஜீன் கரோல் பணத்துக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும், அந்தஸ்துக்காகவும் அரசியலமைப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என கூறினார்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹசரங்கவுக்கு பதில் துஷான் ஹேமந்த

வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக்...

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கிணற்றில் வீசிய சிறுவர்கள்

இந்தியாவின் சித்தூர் மாவட்டம், பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற சிறுமி...