6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி!

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர்.

கொல்கத்தா பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணி வீரர்களால் எளிதாக ரன்கள் குவிக்க முடியவில்லை. ருதுராஜ் 13 பந்துகளில் 17 ரன்னும், கான்வே 28 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அஜிங்யா ரஹானே 16 ரன்களும் அம்பதி ராயுடு 4 ரன்களும் எடுத்து வெளியேற, அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். வழக்கமாக அதிரடியாக விளையாடும் ஜடேஜாவால் 24 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். குறைவான இலக்கு என்பதால் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானத்துடன் விளையாடத் தொடங்கினர். 15 பந்துளில் ஜேசன் ராய் 12 ரன்னும், ரஹ்மானுல்லா குர்பாஸ் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 9 ரன்னில் வெளியேறினார்.

4.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 33 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து இணைந்த கேப்டன் நிதஷ் ராணா மற்றும் ரின்கு சிங் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. ரின்கு சிங் 43 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் நிதிஷ் ராணா 44 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.

ராணா – ரின்கு சிங் இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் மற்றும் 12 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி அடைந்தாலும் சென்னை அணி 15 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் நீடிக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...