31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Date:

உணவு ஒவ்வாமை காரணமாக நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (28 ) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. எந்தவொரு மாணவருக்கும் ஆபத்தான நிலையில்லையெனவும், பெரும்பாலான மாணவர்கள் இன்று (28) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளாசோ தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 5வரை 126 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. பாடசாலை நிர்வாகத்தாலேயே சமையல் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று (28 ) மாணவர்களுக்கு கடலை வழங்கப்பட்டுள்ளது. அதனை உட்கொண்ட மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போக்கு, மயக்கம் என்பன ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து உணவருந்தியவர்களில் சுமார் 31 மாணவர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

105 மாணவர்களுக்கு பாடசாலையில் இன்று (28 ) உணவு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, பரிசோதனைக்காக நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸாரும், நுவரெலியா பொது சுகாதார பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....