கேலி செய்த நடிகைக்கு ஏ.ஆர்.ரகுமான் பதில்

Date:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் நடந்த விழாவொன்றில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அப்போது சாய்ரா பானுவை நிகழ்ச்சி தொகுப்பாளர் பேச அழைத்தார். அவர் பேசுவதற்கு முன்பாக, ‘இந்தியில் பேச வேண்டாம். தமிழில் பேசுங்கள்’ என்று ஏ.ஆர்.ரகுமான் கேட்டுக்கொண்டார்.

சாய்ரா பானுவும் தனக்கு தமிழ் சரியாக பேச வராது என்று சொல்லி ஆங்கிலத்தில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி, ‘என்னது ஏ.ஆர்.ரகுமான் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன? வீட்டில், குடும்பத்தில் என்ன மொழியில் பேசுவாங்க…’ என கேட்டு டுவிட்டரில் பதிவு வெளியிட்டார். இது பரபரப்பானது.

கஸ்தூரியின் பதிவு ஏ.ஆர்.ரகுமானை கேலி செய்வதுபோல் இருப்பதாக வலைத்தளத்தில் பலர் பேசினர். இந்த நிலையில் கஸ்தூரிக்கு பதில் அளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் ‘காதலுக்கு மரியாதை’ என்று இரண்டே வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரியின் கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் கோபப்படாமல் நாசுக்காக பதில் அளித்து இருப்பதாக வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....