மீண்டும் செயற்கை சுவாச கருவியுடன் நடிகை சமந்தா

Date:

நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறினார். ஓய்வுக்கு பின் தற்போது மீண்டும் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து தோல்வியை சந்தித்தது. இது சமந்தாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ‘சாகுந்தலம்’ பட தோல்வி அவரது சினிமா வாழ்க்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு விமர்சித்து இருந்தார். அவருக்கு சமந்தா பதிலடி கொடுத்து இருந்தார்.

சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆஸ்பத்திரியில் செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சைபெறும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என்று அதிர்ச்சி அடைந்தனர்.

சமந்தா தனது ஆரோக்கியத்தை மேம்படுத்த செயற்கை சுவாச கருவியுடன் ஹைபர் பேரிக் என்ற சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி இந்த சிகிச்சை முறையை தொடர வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...