அஜித்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்!

Date:

அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த வாலி, வில்லன், சிட்டிசன் உள்ளிட்ட படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவில் அஜித்தின் நண்பராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. இவர் அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன், ரெட் உள்ளிட்ட ஒன்பது திரைப்படங்களை தயாரித்தார்.

அதன் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். அடுத்தடுத்த படங்களை தயாரித்த எஸ்.எஸ் சக்கரவர்த்திக்கும், அவரின் நண்பர் அஜித்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தன்னுடைய மகன் ஜான் நாயகனாக நடித்த ரேனிகுண்டா என்ற திரைப்படத்தை தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் தன்னுடைய மகன் நடிப்பில் 18 வயசு படத்தை தயாரித்தார். ஆனால் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.

அதேபோல் சிம்பு நடிப்பில் தொடங்கிய வேட்டை மன்னன் திரைப்படமும் நிதி சிக்கல் காரணமாக பாதியிலேயே நின்றது. இதனால் சினிமா தயாரிப்பில் இருந்து எஸ்.எஸ்.சக்கரவர்த்தி விலகி இருந்தார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...