மாணிக்ககற்கள் தோண்டிய ஆறு பேர் கைது

Date:

ஹட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் ஹட்டன் ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை தோண்டி சுற்றாடலை மாசுப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.என்.தெஹிகமவின் ஆலோசனையின் பேரில், ஹட்டன் ஸ்டெதன் தோட்டத்திற்கு அருகாமையில் ஹட்டன் ஓயா அண்மித்த காட்டுப்பகுதியில் மாணிக்கக்கற்களை தோண்டிய சந்தேக நபர்களை சுற்றிவளைத்ததுடன், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அதே தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....