2 தலை.. ஒரே உடல்.. ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளில் ஒருவருக்கு காதலன்..

Date:

மனிதனுக்கு பார்க்க கண்கள், பிடிக்க கைகள், நடக்க கால்கள், பேச வாய் என அனைத்தும் இயற்கையிலேயே அமைந்துள்ளது. ஆனால் சில சமயங்களில் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மரபணு கோளாறுகள் வரும். இதன் காரணமாக, குழந்தைகளின் அமைப்பில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் கருவில் வளரும் இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். அப்படியான இரட்டை சகோதரிகளைப் பற்றி தான் இங்கே சொல்லப்போகிறோம்.

தற்போது 22 வயதாகும் லூபிடா மற்றும் கார்மெனின் உடல், இடுப்போடு இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இருவருமே வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில் அவர்களின் டேட்டிங் வாழ்க்கையும் இருக்கிறது. இருவரில் ஒருவருக்கு காதல் இருந்தால், இன்னொருவர் தனிமையில் இருக்கும் நிலை. அவர்களின் உடல்கள் இணைக்கப்பட்டதால் மற்றவர்களைப் போல் எப்படி அவர்களால் காதல் செய்ய முடியும்? இந்த சகோதரிகள் பிறந்ததும், அவர்கள் 3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் தற்போது தங்கள் வாழ்நாளில் 22 வருடங்களை கழித்துள்ளனர்.

லூபிடா மற்றும் கார்மென் இடுப்புக்கு கீழே மொத்த உடலும் ஒட்டியுள்ளது. அவர்களின் உடலில் ஒரே ஒரு இனப்பெருக்க உறுப்பு மட்டுமே உள்ளது. அதாவது, ஒருவர் உறவு வைத்தாலும் இருவரும் ஒன்றாகவே கர்ப்பமாவார்கள். இது தவிர, அவர்களது உடலின் இரத்த ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும்.

3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள் என மருத்துவர் கூறிய நிலையில், தங்களது ஒவ்வொரு கஷ்டத்தையும் தோற்கடித்து இருபத்தி இரண்டு வருடங்களை கழித்துள்ளனர். இரு சகோதரிகளில் ஒருவருக்கு காதலர் இருக்கிறார், இன்னொருவர் சிங்கிள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி காதலிக்க முடியும்?

லூபிடா மற்றும் கார்மென் இரு சகோதரிகளில் கார்மனுக்கு ஒரு ஆண் நண்பர் இருக்கிறார். டேட்டிங் ஆப் மூலம் அவர் டேனியலை சந்தித்துள்ளார். மெக்சிகோவைச் சேர்ந்த இந்த சகோதரிகள் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். டேட்டிங் செய்வதற்கு முன், இருவரும் இதைப் பற்றி மிகவும் ஆழமாக உரையாடியதாக கூறுகிறார்கள். ஒவ்வொரு விஷயம் குறித்தும் இருவரும் ஆழமாக விவாதித்துள்ளனர். இதன் காரணமாக, கார்மென் மற்றும் டேனியல் இருவரும் உடல் ரீதியான உறவில் கவனம் செலுத்தாமல், ஆத்மார்த்தமான அன்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சிங்கிளாக இருக்கும் லூபிடா விரைவாக தூங்கிவிடுவார். அதன் பிறகு ​​​​கார்மனும் டேனியலும் நிறைய பேசுகிறார்களாம். டேட்டிங் என்று வரும்போது, அந்த நாளை செலெக்ட் செய்யும் வாய்ப்பை லூபிடாவிடம் கொடுத்து விடுகிறார் கார்மென். இதனால் சிங்கிளாக இருக்கும் லூபிடாவுக்கு சலிப்பு தட்டுவதில்லை. இவ்வாறு சமரசம் செய்து கொண்டு, சகோதரிகள் இருவரும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார்கள்!

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கிணற்றில் வீசிய சிறுவர்கள்

இந்தியாவின் சித்தூர் மாவட்டம், பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற சிறுமி...

பெண் ஒருவரை கடத்தி கப்பம் கோரல் !

பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்...