பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

Date:

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ம் திகதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 30-ம் திகதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

இதனை முன்னிட்டு மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் கோடீசுவரரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கு அடிக்கடி புகழாரம் தெரிவித்து வரும் அவர், வெளியிட்டு உள்ள செய்தியில், மன் கி பாத் நிகழ்ச்சியானது துப்புரவு, சுகாதாரம், மகளிரின் பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுடன் தொடர்புடைய பிற விசயங்கள் ஆகியவற்றில் சமூகத்தினர் தலைமையிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஊக்குவித்து வருகிறது.

100-வது நிகழ்ச்சிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்து உள்ளார். மற்றொரு வரலாற்று மைல்கல்லாக, இந்த 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியானது ஐ.நா. சபையின் தலைமையகத்தில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....