மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 17 பேர் காயம்

Date:

காட்பாடியை அடுத்த அக்ராவரத்தில் நேற்று மாடுவிடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் காட்பாடி, லத்தேரி, வேலூர், சித்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டன. வேலூர் உதவி கலெக்டர் கவிதா தலைமை தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். தொடக்கமாக பாதுகாப்பு உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து கால்நடைத்துறையினர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 170 மாடுகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டன. அந்த காளைகள் சீறிப்பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்தது. அப்போது, வீதியின் இருபுறமும் திரண்டிருந்த இளைஞர்கள் மாடுகளை உற்சாகப்படுத்தினர்.

விழாவில் காளைகள் முட்டிதில் 17 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்ட முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இலக்கினை குறைந்த விநாடியில் கடந்த மாடுகளுகளின் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டது.  முதல் பரிசு ரூ.70 ஆயிரம், 2வது பரிசு ரூ.60 ஆயிரம் என மொத்தம் 72 பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காட்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....