பிரதான சாலையில் சேதம் அடையும் பாதாள சாக்கடை தொட்டிகள்

Date:

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கே ஆள் இறங்கு குழிகள் கட்டப்பட்டது.

அவற்றில் தரமற்ற மூலப்பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டதால் தொட்டிகள் சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவற்றை மறு சீரமைக்கும் போதும் தரமான கட்டுமானத்தை மேற்கொள்வதில்லை என்று தெரிகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

உடுமலை நகரப் பகுதியில் பெருகி வருகின்ற மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தியது வரவேற்பு மிகுந்த ஒன்றாகும். ஆனால் ஆள்இறங்கு தொட்டிகள் தொடர்ந்து சேதமடைந்து வருவது கட்டுமானத்தின் மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும் சாலையின் சமதளத்திற்கு ஏற்றாற்போல் அவை கட்டப்படல்லை. திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பாதாள சாக்கடை தொட்டிகள் சேதம் அடைவதும் அவற்றை சீரமைப்பதும் தொடர் கதையாக உள்ளது.

ஒரே பணிக்காக மக்களின் வரிப்பணம் திரும்பத் திரும்ப செலவிடப்படுவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு வரி வசூல் செய்கின்ற நகராட்சி நிர்வாகம் அதன் கட்டுமான பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் உடுமலை-திருமூர்த்திமலை பிரதான சாலையில் எலைய முத்தூர் பிரிவு அருகே சேதம் அடைந்த 3 தொட்டிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதே போன்று அந்த சாலையில் உள்ள சுமார் 12 தொட்டிகள் சேதமடையும் தருவாயில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.மேலும் பிரதான சாலையின் மையப்பகுதி தடுக்கப்படுவதால் வாகனங்கள் விலகிச் செல்வதில் இடையூறுகள் ஏற்படுபவதுடன் அவசரகால உதவிகளை பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது.

எனவே சேதம் அடைந்து வரும் பாதாள சாக்கடை தொட்டிகளை தரமான கட்டுமான பொருட்கள் கொண்டு கட்டுவதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் அதன் கட்டுமானத்தை ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...