AK 62 படக்குழு எடுத்த முடிவு..

Date:

அஜித் நடிக்க உள்ள 62 ஆவது படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகிறது.

அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதற்கு அடுத்ததாக அவர் விக்னேஷ் சிவன் இயக்கம் படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்திலிருந்து விலக்கப்பட்டார்.

அதன் பிறகு மகிழ்திருமேனி அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமான. இது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும், அதை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 62 ஆவது படத்தின் தலைப்பை முதல் பார்வையுடன் வெளியிடுகின்றனர்.

நடிகர் அஜித் தற்போது தன்னுடைய உலக பைக் பயணத்திற்காக நேபாளில் உள்ளார். ஆனால் அவர் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 62 ஆவது படத்தின் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதை படக்குழுவினருக்கு அறிவுறுத்திவிட்டார். இதனால் அஜித் 62 படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் அவர் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகிறது. லைகா நிறுவனம் அந்த அறிவிப்பை வெளியிட உள்ளது. இருந்தாலும் அதற்கான நேரம் நாளை காலை முடிவாகும் என படக் குழுவினர் தரப்பில் கூறுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....