உங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள்… கஸ்தூரி காட்டம்

Date:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை வடபழனியில் உள்ள 1,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை கஸ்தூரி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய கஸ்தூரி, ‘இந்த விழாவிற்கு என்னை அழைத்த போது நான் கூறிய முதல் விஷயம் நான் தமிழகத்திலேயே இல்லை. குடும்பத்தோடு ஹைதராபாத்தில் தங்கி உள்ளேன். தெலுங்கில் தான் அதிக படம் நடித்து வருகிறேன். அதிமுகவில் நான் உறுப்பினர் அல்ல. ஆனால் எனக்கு ஓட்டுரிமை வந்ததிலிருந்து நான் அதிமுகவிற்கு தான் ஓட்டு போட்டு வருகிறேன். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது ஒரே ஒரு முறை அவருக்கு வாக்களித்துள்ளேன்.

பெண் குழந்தைகள் கல்லூரி படிப்பைத் தொடருவதற்கான திட்டத்தை முதலில் துவக்கி வைத்தவர் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் போன்ற நலத்திட்டங்களை தொடக்கி வைத்தவர் ஜெயலலிதா. பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்த ஜெயலலிதா தற்போது நம்முடன் இல்லை. அவர் தெய்வமாகிவிட்டார். அவரை நாம் தெய்வமாக வணங்க வேண்டும்.

கட்சியை பார்த்து நலத்திட்ட உதவிகள் வழங்காமல் தேவையை அறிந்து உதவி வழங்குவது அதிமுகவின் சித்தாந்தத்தில் உள்ளது. மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று கட்சியை கடந்து நான் நிறைய விமர்சித்து உள்ளேன். திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுவை வழங்கலாம் என்று இப்போதுள்ள அரசு அறிவித்துள்ளது. அதை திமுக கட்சிக்காரர்களே விமர்சித்த பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் வாபஸ் வாங்கவில்லை. ஆகவே மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் தான் இம்மாதிரியான அநியாயங்களை நிறுத்த முடியும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....