ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு

Date:

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் சிக்கின. இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவால் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நிலச்சரிவில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இதில் பலியானோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....