வங்காளதேசத்தில் வெப்பநிலை உயர்வால் அரிசி உற்பத்தி 40 சதவீதம் குறையும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Date:

காலநிலை மாற்றத்தால் உலகில் தற்போது ஏற்பட்டு வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வெப்பநிலை அதிகரிப்பு ஆகும். அதன்படி நம் அண்டை நாடான வங்காளதேசத்திலும் வெப்பநிலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. அதாவது நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த மாத நிலவரப்படி அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 4 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பு குறித்து வங்காளதேசத்தின் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அஜிசுர் ரகுமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளில் இது அதிகபட்ச வெப்பநிலை ஆகும். வருகிற நாட்களில் வெப்ப அலை மீண்டும் உருவாகி நாட்டில் அரிசி உற்பத்தி 40 சதவீதம் வரை குறையலாம். எனவே மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்புக்கு இது மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....