நடிகர் விக்ரம் விலா எலும்பு முறிந்தது…!

Date:

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கலான் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் தங்கலான் படப்பிடிப்பில் ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயம் காரணமாக தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்பார் என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் விக்ரம் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....