இஷான் கிஷன் – சூர்யகுமார் அதிரடி… 6 விக். வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது மும்பை இந்தியன்ஸ்

Date:

இஷான் கிஷன் – சூர்யகுமார் யாதவ் அதிரடி அரைச்சதம் விளாச, பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 2 போட்டிகள் நடைபெற்றன.

மதியம் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தானது. இதையடுத்து 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்டன.

இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பிரப்சிம்ரன் 9 ரன்னும், கேப்டன் தவான் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த மேத்யூ ஷார்ட் 27 ரன்னில் வெளியேற பஞ்சாப் அணி 11.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த 95 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து இணைந்த லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா இணை மும்பை அணியின் பவுலிங்கை சிதறடித்தது. 4 சிக்சர் 7 பவுண்டரியுடன் லிவிங்ஸ்டோன் 42 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.

அவருக்கு உறுதுணையாக இருந்த ஜிதேஷ் சர்மா 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 3விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 214 ரன்கள் குவித்தது.

மும்பை அணி 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியபோது 1 ரன் எடுப்பதற்குள்ளாக கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது.

இதையடுத்து கேமரூன் கிரீன் – இஷான் கிஷன் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். கிரீன் 23 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்ய குமாருடன் இணைந்து இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.

இருவரும் வழக்கமான ரன் குவிப்பில் ஈடுபட்டதால் மும்பை அணியின் ஸ்கோர் எகிறியது. 3 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 31 பந்துகளில் சூர்யகுமார் 66 ரன்களும், 41 பந்துகளில் இஷான் கிஷன் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த திலக் வர்மா 10 பந்தில் 26 ரன்னும், டிம் டேவிட் 19 ரன்களும் எடுக்க 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மும்பை அணி வெற்றி இலக்கை எட்டியது. அசத்தலான இந்த வெற்றியைத் தொடர்ந்து பாயின்ட்ஸ்டேபிளில் மும்பை அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...