ஐஸ்வர்யா ராஜேஷ் படம் சர்ச்சை கதையா

Date:

ஐஸ்வர்யா ராஜேஷ் பர்ஹானா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்துள்ளார். இதில் ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், கிட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. எதிர்ப்பு வலுப்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கும், டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை சாலிகிராமத்தில் நடந்த பர்ஹானா பட நிகழ்ச்சியிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கடேசன் பேசும்போது, “நான் சென்னை புதுபேட்டையில் வளர்ந்தவன். அங்கு இஸ்லாமியர்கள் அதிகம். புதுபேட்டை, திருவல்லிக்கேணி என்று நான் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தது எல்லாமே இஸ்லாமிய நண்பர்கள் நடுவில்தான். நான் வளர்ந்த அனுபவத்தை படமாக எடுத்துள்ளேன். மதம் சார்ந்து படம் எடுக்கிறேன் என்று சர்ச்சை எழுந்துள்ளது. என்னுடைய நண்பர்களைப் பற்றித்தான் எடுத்திருக்கிறேன். இந்த படம் மதம் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “சில படங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். பர்ஹானா அதுபோன்ற ஒரு படம்” என்றார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்த படத்தில் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. கொண்டாடும் படமாகவே இருக்கும்” என்றார்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

3வது தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசிய...

நிஷான்[ Nissan ] கார் நிறுவனத்தின் புதிய தீர்மானம்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிஷான், மின்சார கார் உற்பத்தியை...

மனைவி கொலை கணவருக்கு மரண தண்டனை !

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை...

ஹசரங்கவுக்கு பதில் துஷான் ஹேமந்த

வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக்...