ரூ.300 கோடி வசூலை கடந்த ‘பொன்னியின் செல்வன் – 2’ திரைப்படம்

Date:

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ம் திகதி திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

‘பொன்னியின் செல்வன் – 2’ திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீசில் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....