கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு எதிர்ப்பு

Date:

தமிழில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. தற்போது ஆர்யாவுடன் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், ஹரிஷ் கல்யாணுடன் நூறுகோடி வானவில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் சர்ச்சை கதையம்சம் கொண்ட கேரளா ஸ்டோரி படத்தில் சித்தி இத்னானி கீதாஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழ் நாட்டில் கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்னால் போராட்டங்கள் நடந்தன.

இந்த படம் குறித்து சித்தி இத்னானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கேரளா ஸ்டோரி வெறுப்பை உமிழும் படம் இல்லை. விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். கேரளா ஸ்டோரி எந்த மதத்துக்கும் எதிரான படம் இல்லை. பயங்கரவாதத்தைத்தான் இந்த படம் எதிர்க்கிறது. எனது கடமையை நடிகை என்ற முறையில் சரியாக செய்து இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

சித்தி இத்னானி கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளா ஸ்டோரி படத்தில் எப்படி நடிக்கலாம்? உங்கள் படத்தை புறக்கணிப்போம் என்றெல்லாம் கருத்துகள் பதிவிட்டு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....