ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதவுள்ள இந்திய அணியில், காயம் காரணமாக விலகியுள்ள கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா – அவுஸ்ரேலியா மோதும் இந்த டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 ஆம் திகதி தொடங்க உள்ளது. சமீபத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக லக்னோவில் மே 1 ஆம் திகதி நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சூப்பர் ஜயன்ட்ஸ் அணி கேப்டன் ராகுல் களத்தடுப்பில் இருந்த போது தொடை பகுதியில் பலத்த காயம் அடைந்தார்.
அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் மற்றும் உலக டெஸ்ட் பைனலில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், உலக டெஸ்ட் பைனலுக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ உத்தியோகப்பூர்வமாக நேற்று மாலை அறிவித்தது.
ரோஹித் சர்மா தலைமையில், ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).
மேலதீக வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் மற்றும் சூர்யகுமார் யாதவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
NEWS – KL Rahul ruled out of WTC final against Australia.
Ishan Kishan named as his replacement in the squad.
Standby players: Ruturaj Gaikwad, Mukesh Kumar, Suryakumar Yadav.
More details here – https://t.co/D79TDN1p7H #TeamIndia
— BCCI (@BCCI) May 8, 2023