பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் மரணம் – 200 பேரை விடுதலை செய்ய அரசாங்கம் முடிவு

Date:

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்த நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.

வருகின்ற 12 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) 199 இந்திய மீனவர்களை விடுதலை செய்யப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டு பின்னர் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகிள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....