பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை

Date:

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இ.ஜீன் கரோல் இந்த விவகாரம் குறித்து, டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணையில் டிரம்ப் 5 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.41 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும், அவரை அவமதிப்பு செய்ததற்கும் டிரம்ப் பொறுப்பேற்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆயினும் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற எழுத்தாளரின் குற்றச்சாட்டை மன்ஹாட்டன் நடுவர் மன்ற நீதிபதி நிராகரித்தார். இந்த தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த டிரம்ப் தமக்கு நேர்ந்த அவமானம் என்று கூறினார்.

இதுகுறித்து டிரம்ப் தரப்பில் கூறும் போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். இது ஒரு அவமானம். இந்தப் பெண் யாரென்று கூட எனக்குத் தெரியாது. அவர் யார், எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை.

வெறுக்கத்தக்க, கிளிண்டனால் நியமிக்கப்பட்ட நீதிபதியிடமிருந்து நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும், அவர் இந்த விசாரணையின் முடிவை முடிந்தவரை எதிர்மறையாக இருப்பதை உறுதிசெய்ய முயன்றார்,’ என்று கூறப்பட்டு உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....