அமெரிக்காவுக்கு வருகிற ஜூன் 22-ம் திகதி பிரதமர் மோடி

Date:

பிரதமர் மோடி வருகிற ஜூன் 22-ம் திகதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

அவரது இந்த பயணம், இரு நாடுகளின் வெளிப்படையான, திறந்த நிலையிலான, வளம் சார்ந்த பகிரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கு வலிமை சேர்க்கும். இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளை பாதுகாக்கும்.

பாதுகாப்பு துறை, தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நமது செயல்திட்டம் சார்ந்த தொழில்நுட்ப உறவை மேம்ப்டுத்தும் வகையிலான பகிரப்பட்ட தீர்மானம் ஆகியவற்றையும் பாதுகாக்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

பிரதமர் மோடி இதற்கு முன்பு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் திகதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மற்றும் அதிபர் பைடன் ஆகிய இருவரும் ஐ.சி.இ.டி. எனப்படும் முக்கியம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான திட்ட தொடக்கங்களை அறிவித்தனர்.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....