சூர்யகுமார் யாதவ் வெறித்தனம் – குஜராத் அணிக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!

Date:

ஐபிஎல் கிரிகெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது.

துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா 18 பந்துகளில் 29 ரன்களை குவித்தார்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 20-வது ஓவரின் கடைசி பந்தில் சதம் அடித்தார். இவர் 49 பந்துகளில் 103 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இவருடன் ஆடிய வதெரா 7 பந்துகளில் 15 ரன்களை மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின் விஷ்னு வினோத் 20 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்களை சேர்த்துள்ளது. குஜராத் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....