ரஷீத்கான் போராட்டம் வீணானது – 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை

Date:

ஐபிஎல் கிரிகெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா 18 பந்துகளில் 29 ரன்களை குவித்தார்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 103 ரன்களை குவித்தார். இறுதியில், 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது.

குஜராத் சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரித்திமான் சகா, ஷுப்மன் கில் முறையே 2 மற்றும் 6 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களுக்கு நடையை கட்டினார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 14 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 26 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின் ராகுல் தெவாட்டியா 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

கடைசி கட்டத்தில் ரஷீத் கான் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 32 பந்தில் 10 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 79 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 9வது விக்கெட்டுக்கு ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் ஜோடி 88 ரன்கள் குவித்தது.

இறுதியில், குஜராத் அணி 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது.

மும்பை அணி சார்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டும், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....