கொழும்பில் ஆயுதம் தாங்கிய படையினர்

Date:

கொழும்பில் நேற்று முதல் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தை அடிப்படையாக கொண்டு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிவிசேட படையினர், சிறப்பு கொமாண்டோ, பொலிஸார், கலகம் தடுக்கும் குழுவினர், நீர் தாரகை வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சை மேற்கொள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கும் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதால், வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....