உக்ரைன் அதிபருடன் போருக்கு பின் முதன்முறையாக பிரதமர் மோடி நேரில் சந்திப்பு

Date:

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாடு மே 19-ந் திகதி முதல் 21-ந் திகதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. உறுப்பினர் நாடு அல்லாதபோதும், ஜப்பானின் அழைப்பையேற்று பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சென்று உள்ளார்.

இதேபோன்று இந்த உச்சி மாநாட்டுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் ஜப்பான் அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி, அவர் இன்று ஹிரோஷிமா நகருக்கு சென்று சேர்ந்து உள்ளார்.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில், தனது நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்சுடனான சந்திப்பு பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரான்சு நாட்டு அதிபர் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும்நடத்தியுள்ளார்.

ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட புகைப்படத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இடம் பெற்று உள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கிய பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இது முதன்முறையாகும். ரஷிய அதிபர் புடின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பலமுறை பேசியிருக்கிறார்.

இது போருக்கான சகாப்தம் அல்ல என கடந்த ஆண்டு செப்டம்பரில் பேசும்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்த போருக்கு, தூதரக அளவிலும் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசும் கூறியது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....