விருது விழாவிற்கு வித்தியாசமான உடையில் சென்ற ஐஸ்வர்யா ராய்!

Date:

உலகின் மிக உயரிய திரைப்பட விருது விழாவான கேன்ஸ் விருது வழங்கும் விழாவில், நடிகை ஐஸ்வர்யாராய் கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் ஆஸ்கார் விருதை அடுத்து, மிகப் பிரபலமான விருதாக கருதப்படும், இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு சென்றிருந்த நடிகை ஐஸ்வர்யாராய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஐஸ்வர்யா ராய் வெள்ளி கவுன் ஒன்றை அணிந்து கொண்டு, அவரது தலையை பாரிய அளவிலான வெள்ளி துணியால் முக்காடு போட்டுக் கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் அவரது உடை மிக வேடிக்கையாக இருக்கிறதென, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதில் சிலர் ஐஸ்வர்யாராய் உடை அணிந்திருந்த விதம் பார்சல் செய்யப்பட்ட பரிசு பொருள் போல இருந்தது எனவும், சில்வர் கவரால் சுற்றப்பட்ட பரோட்டோ போல் அவரது ஆடை அலங்காரம் இருக்கிறது எனவும் கலாய்த்துள்ளனர்.

விழாவிற்கு செல்லும் முன்பாக அவர் அணியவிருக்கும் உடை பற்றிய தகவல் வெளியானது அதில் ‘ இந்த உடை எடை குறைவான அலுமினிய உலோகத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது எனவும், சில படிகங்கள் இதில் பதிக்கப்பட்டிருக்கிறது’என கூறப்பட்டிருந்தது.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யாராய் இது மாதிரியான உடை அணிந்து சென்று பெரும் சர்ச்சையாகியுள்ளது. மேலும் நெட்டிசன்கள் தொடர்ந்து ஐஸ்வர்யா ராயின் உடை அலங்காரத்தை கலாய்த்து வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....