தனியார் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

Date:

நெல்லை அருகே ஆட்சிமடம் பகுதியில் தனியார் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இரண்டு வாகனங்களின் டிரைவர்கள் உட்பட 27 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 4 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று முக்காணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ஆட்சிமடம் அருகே வந்த போது, திடீரென பஸ்சின் முன்பக்க டயர் வெடித்ததில் பஸ், எதிரே வந்த வேன் மீது மோதியது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு விருதுநகரில் உள்ள ஒரு கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வழியாக அந்த வேனில் வந்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷான்[ Nissan ] கார் நிறுவனத்தின் புதிய தீர்மானம்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிஷான், மின்சார கார் உற்பத்தியை...

மனைவி கொலை கணவருக்கு மரண தண்டனை !

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை...

ஹசரங்கவுக்கு பதில் துஷான் ஹேமந்த

வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக்...

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...