கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசல் – 9 பேர் பலி

Date:

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு எல் சல்வடோர். இந்நாட்டில் சல்வடோர் லீக் என்ற பெயரில் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த கால்பந்து தொடரில் நேற்று காலிறுதி சுற்று போட்டி நேற்று நடைபெற விருந்தது. இதில், அலியன்சா – எப்ஏஎஸ் மோதவிருந்தன.

அந்நாட்டின் கஸ்கட்லன் நகரில் உள்ள மைதானத்தில் போட்டி நடைபெறவிருந்த நிலையில் போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். மைதானத்திற்குள் செல்ல ரசிகர்கள் வேகவேகமாக நுழைவாயிலில் திரண்டனர்.

அப்போது ஒரு நுழைவாயிலில் கூட்ட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது சக ரசிகர்கள் ஏறி நடந்து சென்றனர்.

இந்த கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக்கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில் கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....