ஜப்பான், தென்கொரிய பிரதமர்களுக்கு பைடன் அழைப்பு

Date:

ஜி-7 உச்சி மாநாட்டின்போது உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பில், அமெரிக்க அதிபர் பைடன், ஜப்பான் மற்றும் தென்கொரிய பிரதமர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், அமெரிக்காவில் முத்தரப்பு கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும்படி ஜப்பான் மற்றும் தென்கொரிய பிரதமர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா உறுதியாக செயல்படும் சூழலில், இந்த அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி வெள்ளை மாளிகை விடுத்து உள்ள அறிக்கையில், ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஹிரோசிமா நகரில், ஜப்பான் மற்றும் தென்கொரிய பிரதமர்களான முறையே கிஷிடா மற்றும் யூன் ஆகியோரை அதிபர் பைடன் சந்தித்து பேசினார்.

அப்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தைரியமிகுந்த பணிகளை செய்ததற்காக அவர்களை பைடன் பாராட்டினார் என தெரிவித்து உள்ளது.

இதற்கு முன், ஜி-7 உச்சி மாநாட்டின்போது அதன் தலைவர்கள் அனைவரும், சீனாவை ஒருங்கிணைந்து அணுக வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஒப்பு கொண்டனர்.

நம்முடைய கூட்டு பொருளாதார பாதுகாப்பு மற்றும் மண்டல ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு எதிராக ஒரு சவாலாக சீனா விளங்கி வருகிறது என அங்கீகரிக்கும் வகையில் ஜி-7 தலைவர்கள் ஒப்பு கொண்டனர்.

பொருளாதார பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் செயல்திட்டங்களில், வடகொரியாவின் சட்டவிரோத அணு ஆயுத மற்றும் ஏவுகணை பரிசோதனை மிரட்டல்களை எதிர்கொள்ள புதிய ஒருங்கிணைப்புடன் செயல்படுவது உள்பட முத்தரப்பு ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு எப்படி கொண்டு செல்வது என்பது பற்றியும் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர் என வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த நவம்பரில், கடைசியாக தலைவர்கள் 3 பேரும் கம்போடியாவில் மூன்று வழி சந்திப்பு நடத்தி ஆலோசனை நடத்தினர். அதில், வளர்ந்து வரும் வடகொரியாவின் அச்சுறுத்தல்களான அணு ஆயுத மற்றும் ஏவுகணை பரிசோதனையை எதிர்கொள்ள, ஏவுகணை எச்சரிக்கை தரவுகளை பகிர்ந்து கொள்வது என கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டன.

 

 

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...