ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: லீக் சுற்று நிறைவு- இன்று ஆட்டம் இல்லை

Date:

10 அணிகள் பங்கேற்ற 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து நாள்தோறும் இடைவிடாது ஆட்டங்கள் நடந்து வந்தது. நேற்றிரவு 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் அரங்கேறியது.

இந்த லீக் ஆட்டத்தின் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் பிளே-ஆப் போட்டிகள் நடைபெறுகிறது. இதனால், இன்று போட்டிகள் எதுவும் நடைபெறாமல் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. 24-ந்தேதி வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...