திருமண நிகழ்வுக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து!

Date:

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் (23) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, சிறுவர்கள் உள்ளடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக பயணித்த மகேந்திரா ரக வாகனம் மற்றும் மதவாச்சி வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உட்பட 9 வயது, 6 வயது, 4 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளடங்களாக ஐவர் நாளையதினம் (24) இடம் பெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றிற்காக முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் வருகை தந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து தள்ளாடி நோக்கி பயணித்த மஹேந்திரா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதிய நிலையில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதே நேரம் பலத்த காயங்களுடன் ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....