சூப்பர் ஹிட் ஹீரோவாக இருந்த நடிகர் ஒரு எளிய பைக் மெக்கானிக்காக மாறினார்…!

Date:

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறியப்பட்டவர் நடிகர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான ‘காதல் தேசம்’, படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மிர்சா அப்பாஸ் அலி என்ற முழுப்பெயர் கொண்ட அப்பாஸ், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் இந்திய நடிகரும் மாடலும் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்திலும் நடித்து உள்ளார்.

1996 ஆம் ஆண்டு கதிரின் காதல் தேசம் மூலம் அப்பாஸ் அறிமுகமானார்.இவருக்கு முதல் படத்திலேயே அதிக பெண் ரசிகர்கள் உருவானார்கள். விஐபி, பூச்சூடவா, ஜாலி. கமலுடன் ஹேராம், பம்மல் கே சம்மந்தம், ரஜினியுடன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

ஆம், ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக கருதப்பட்ட அப்பாஸ், போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது நியூசிலாந்தில் பைக் மெக்கானிக்காக உள்ளார். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சகல்லம் என்ற படத்தில் நடித்திருந்தார்.இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

தனது கடந்த காலத்தைப் பற்றி பேசும்போது அவர் மிகவும் மனமுடைந்து ஒருமுறை தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது என கூறி உள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளை எப்படி தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, சான்றிதழ் படிப்பு படித்தேன் என்று அப்பாஸ் கூறினார்.

நடிகரின் மனைவி எரும் அலி ஒரு பிரபலமான வடிவமைப்பாளர், குறிப்பாக அவரது திருமண ஆடைகளுக்கு பெயர் பெற்றவர். முன்னணி நடிகராக வணிகரீதியாக ஏமாற்றமடைந்த தமிழ்ப் படங்களுக்குப் பிறகு, அப்பாஸ் 2000களின் முற்பகுதியில் இரண்டாவது ஹீரோவாக பல படங்களில் நடித்து உள்ளார்.

ஆனால் தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் நிம்மதியாக ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து வருகிறார்.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....