அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது!

Date:

நமது நாடு வளமான நாடாக இருந்தாலும், தற்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்தில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருவதாகவும், வட்டி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் வியாபாரங்களையும் அரசாங்கம் முடக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடு இவ்வாறான நிலையில் இருக்கும் போது தற்போதைய அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்கள் ஊடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறிவருவதாகவும், தற்சமயம் உண்மையை மக்களிடம் கொண்டு செல்லும் சுதந்திர ஊடக நிறுவனங்கள் கூட அடக்குமுறைக்குட்படுத்த சட்டங்களைக் கொண்டு வருவதாகவும், அச்சட்டங்களின் ஊடாக தம்மை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்களை ஒடுக்க முயற்சித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய சட்டங்கள் மூலம் மக்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவும் தயாராகி வருவதாகவும், இந்த சட்டமூலங்கள் மூலம் மக்களுக்கு அதிகபட்ச இடையூறுகளை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காத இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

அரலகங்வில தம்மின்ன பகுதியில் உள்ள மட்பாண்ட உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (02) ஆராயச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...