இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு..

Date:

‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவருமான கமல்ஹாசன், இயக்குனர்கள் பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நடிகர்கள் வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “ரகுமான் சார் , உங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சார். இன்னும் டெலிபோன் மணிபோல் சாங் செம்ம இளமையா இருக்கு… எனக்கு தான் வயசு ஆயிடுச்சு. நானும் மாரி செல்வராஜ் பிரதரும் ஒண்ணா கிரிக்கெட் லாம் விளையாடி இருக்கோம். அப்போ அவர் ஒழுங்காக கிரிக்கெட் ஆடல, ஆனா எடுத்த படம் எல்லாமே சிக்சர் தான்.

பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர் என்று உலகிற்கு எடுத்துரைத்தது. இன்று வெற்றி மாறன் சாருக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளிக்கிறது. மாற்று சினிமாக்கான முயற்சியை எடுத்து கைத்தட்டல்களுக்குச் சொந்தமாகியிருக்கிறார். அதை தொடங்கி வைத்தது கமல் சார் தான். விதை கமல் சார் போட்டது” என்று அவர் கூறினார்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு...

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கிணற்றில் வீசிய சிறுவர்கள்

இந்தியாவின் சித்தூர் மாவட்டம், பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற சிறுமி...

பெண் ஒருவரை கடத்தி கப்பம் கோரல் !

பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்...