ஆஸ்திரேலியாவில் 800 கிலோ போதைப்பொருள் கடத்திய 3 வாலிபர்கள் கைது

Date:

ஆஸ்திரேலியாவின் ராட்னெஸ்ட் தீவுக்கு அருகே ப்ரீமண்ட் கடற்பகுதியில் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. கடலோர போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது என்ஜின் பழுதாகி இருப்பதால் படகு இங்கு நின்று கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த படகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சுமார் 30 பைகள் காணப்பட்டன.

அதனை பிரித்து பார்த்தபோது 800 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து படகில் இருந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சிட்னி விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு புறப்பட தயாராக இருந்த மற்றொரு வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....