மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு

Date:

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்களுக்கு விஜய் பரிசுகள் வழங்க உள்ளார்.

இது குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

விஜய் சொல்லுக்கிணங்க, வருகின்ற 17-ம் திகதி (சனிக்கிழமை) அன்று “அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் 2023-ம் ஆண்டு நடந்து முடிந்த “பத்து மற்றும் பனிரெண்டாம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கவுரவப்படுத்த உள்ளார்” என்று கூறியுள்ளார்.

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...