“சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்”

Date:

பிரபல இந்தி திரைப்பட நடிகை கஜோல் தமிழில் மின்சார கனவு, தனுசுடன் விஐபி -2 ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.நடிகர் அஜய் தேவ்கான் மனைவியான நடிகை கஜோல் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார்.

எப்போழுதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்ட அனைத்து இடுகைகளையும் நீக்கியுள்ளார்.

கஜோல் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பதிவில், “என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்” என்று எழுதினார். “சமூக ஊடகங்களிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறி உள்ளார். சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை .

இந்நிலையில் சிலர் இதனை நடிகை கஜோல் நடித்து அடுத்து வரவிருக்கும் வலைத் தொடரான’ தி குட் வைப் – அமெரிக்க கோர்ட்ரூம்’ நாடகத்தின் இந்தித் தழுவலுக்கு விளம்பர உத்தியாக இருக்கும் என்று கருதுகின்றனர்.சமூக ஊடகத்தின் ஒரு பிரிவு அவருக்கு வாழ்த்து செய்தியும் அனுப்பியுள்ளது.

இவரது இந்த முடிவிற்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....