மதுவுக்கு அடிமையாகி மீண்ட நடிகை

Date:

பிரபல இந்தி நடிகை பூஜா பட். இவர் தமிழில் அஜித்குமாரின் கல்லூரி வாசல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களை தயாரித்தும் இருக்கிறார். பூஜா பட் தனக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும் தற்போது குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பூஜா பட் அளித்துள்ள பேட்டியில், “நான் நீண்ட நாட்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன். எல்லோரும் என்னை குடிகாரி என்ற அழைத்து கேலி செய்தனர். இதனால் எனது 44 வது வயதில் குடிப்பழக்கத்தை விட்டு விட்டேன்.

இந்த சமூகம் ஆண்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுபோன்ற லைசென்ஸ் கொடுக்கிறது. ஆனால் பெண்களின் பேச்சை கேட்காது. ஆண்கள் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் பெண்கள் நிலைமை வேறு. அவர்கள் குடிக்கிறோம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவே பயப்படுகின்றனர்.

அப்படி இருக்கும்போது குடிப்பழக்கத்தை விட்டு விட்டேன் என்று எப்படி சொல்வார்கள். என்னை பொறுத்தவரை நான் எல்லோரது முன்னிலையிலும் குடித்தேன். இப்போது அந்த பழக்கத்தை விட்டதையும் பகிரங்கமாக சொல்கிறேன். என்னை குடிகாரி என்று அழைப்பவர்களிடம் நான் அந்த பழக்கத்தை விட்டு விட்டேன் என்று சொல்லிக்கொண்டே வருகிறேன்” என்றார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....