நாட்டில் தற்போது ஒரு கிலோ கிராம் அரிசியை 125 ரூபாய் முதல் 130 ரூபாய் வரையிலான விலையில் கொள்வனவு செய்யும் திறன் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 130 ரூபாவிற்கும் குறைவான விலையில் நெல் விற்பனை செய்வதை தவிர்ப்பதற்கு விவசாயிகளை தெளிவுபடுத்தும் திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




