பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!

Date:

சீமெந்து, மாபிள், இரும்பு, கோழி இறைச்சி மற்றும் வெதுப்பக உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை, அடுத்த சில வாரங்களுக்குள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக, வர்த்தமானி அறிவித்தல் மூலம், கட்டுப்பாட்டு விலையை அமுலாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக, ஜனாதிபதி ஊடக கேந்திரத்தில் இன்று(22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய உற்பத்தியாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறவேண்டிய நன்மைகள் இன்னும், பொதுமக்களை சென்றடையவில்லை.

மின்கட்டணம் மற்றும் வங்கி வட்டிவீத அதிகரிப்பு போன்ற காரணங்களால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனினும், நாம் தற்போது கொண்வந்துள்ள பொருளாதார முன்னேற்றமானது, ஒருவழியிலேனும் அவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, சீமெந்து, மாபிள், இரும்பு, கோழி இறைச்சி மற்றும் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....