‘லியோ’ படத்தில் இருந்து ‘நா ரெடி’ பாடல் வெளியானது

Date:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தில் இருந்து “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

முன்னதாக ‘நா ரெடி’ பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ‘லியோ’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளில் சரியாக 12 மணிக்கு லோகேஷ் வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது ‘நா ரெடி’ பாடலை ‘லியோ’ படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....