இலங்கை அணி அபார வெற்றி

Date:

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இன்று (25) இலங்கை அணி மற்றும் அயர்லாந்து அணி மோதின.

குறித்த போட்டியில் இலங்கை அணி 133 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

எனவே முதலில் துப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது. அதிகபடியாக திமுத் கருணாரத்ன 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் திமுத் கருணாரத்ன பெற்ற முதலாவது சதம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சதீர சமரவிக்ரம 82 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அயர்லாந்து அணியின் மார்க் அடேர் 46 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், பெர்ரி மெக்கார்த்தி 56 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 27 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 326 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 31 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....